July 19, 2017 தண்டோரா குழு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக,அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக,கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதைபோல் கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவானி அணையிலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கோவையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.