July 19, 2017 தண்டோரா குழு
வாட்ஸ் அப்பில் புதிய யூடியூப் காணொளிகளை பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இணையதளமான பேஸ்புக் பயனாளர்களை போல் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.காணொளி அழைப்பு, குரல் வழி அழைப்பு, குழுக்களுக்கு இடையே சாட் செய்யும் வசதி ஆகியவை வாட்ஸ் அப்பில் பிரபலமானவை. தற்போது அதிலே யூடியுப் காணொளிகளை பார்க்கும் வசதியும் அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது வாட்ஸ்அப்பில் அனுப்பபடும் யூடியூப் லிங்க்கை ஓபன் செய்தால் அந்த லிங்க் யூடியூப் பக்கத்துக்கு சென்று பின் வீடியோ பிளே ஆகும். ஆனால் புதிய வசதியில் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் ஆப்பிளிக்கேஷனுக்கு உள்ளேயே பார்த்து மகிழ முடியும். யூடியூப் பக்கத்துக்கு செல்லாது சாதாரண வீடியோ பதிவுகளை பார்ப்பது போன்று பார்க்கலாம்.
அதன் பிறகு, வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டே நீங்க காணொளியையும் பார்க்கமுடியும். உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை படிக்க காணொளிகள் இடையுறாக இருந்தால், அதை நிறுத்தாமல் வேறு இடத்தில் மாற்றவும் முடியும். செய்தியை படித்து விட்டு, காணொளியை முழு திரையில் பார்க்கவும் முடியும்.
அந்த புதிய அப்ளிகேசன் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 65, ஐபோன் 65 பிளஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களில் செயல்படுத்தப்படும்.