July 20, 2017 தண்டோரா குழு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் அனிதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்க டிஜிபி சத்திய நாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை துறை டிஜஜி ரூபா குற்றம் சாற்றினார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது.
இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறை துறை டிஜஜி ரூபா போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில்,இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் அனிதா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்து தார்வார்டு சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளர். ஏற்கனவே 2 உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் அனிதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.