• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க வுடன் கூட்டணி முடிவாகவில்லை. தே.மு.தி.க மறுப்பு.

March 5, 2016 வெங்கி சதீஷ்

தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே தே.மு.தி.கவிற்கும் தி.மு.கவிற்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விட்டது என்றும், 59 தொகுதிகளுக்கு தே.மு.தி.க ஒத்துக்கொண்டது என்றும் செய்திகள் பரவின. அதிலும் குறிப்பாக ஒரு சில பத்திரிக்கைகளில் 64 சீட்டுகள் கொடுக்க தி.மு.க முன்வந்தும், 59 சீட்டுகள் போதும் என ராசியான எண்ணுக்கு ஐந்து சேட்டை விட்டுக்கொடுத்ததாகவும் செய்தி வெளியிட்டன. மேலும் அதின் தொடர்ச்சியாக பண பேரம் முடிவடைந்து மும்பையில் வைத்து பணம் கொடுக்கப்பட்டு வருகிறது எனவும் அதை விஜயகாந்தின் நண்பரும் தயாரிப்பாளருமான ஒருவரின் மகன் மும்பையில் பெற்று பின் தமிழகம் அனுப்புவார் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. இதனால் கடந்த முறை தமிழகம் வந்த பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரும் விஜயகாந்தைச் சந்திக்காமல் சென்றது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாலை தே.மு.தி.க கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரசேகர் ஒரு அறிக்கையை வெளியிட்டதோடு, தானே பேசி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை யாருடனும் கூட்டணி அமையவில்லை. அது குறித்து விஜயகாந்த் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனவும், விஜயகாந்த் அறிவிக்கும் கூட்டணி முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி முடிந்துவிட்டது என்ற செய்தி ஒரு குறிப்பிட்ட கட்சியால் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் தி.மு.க தன்னுடன் கூட்டணி பேசும் கட்சிகளை கூட்டணி முடியும் முன்னரே கூட்டணி அமைந்துவிட்டதாகச் செய்தியை பரவவிட்டு அவர்கள் மற்றவர்களுடன் கூட்டணி பேசாதவாறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும் இந்தமுறை அவருடன் முதன் முதலில் காங்கிரஸ் கட்சி சேர்ந்துள்ளதால் கூட்டணிக்கு மற்ற கட்சிகள் யோசனை செய்கின்றன. எனவேதான் தே.மு.தி.க பற்றிய இது போன்ற ஒரு வதந்தியைப் பரப்பியிருக்கும் எனத் தெரிவித்தனர். ஆனால் தற்போது மறுப்பு தெரிவித்திருக்கும் தே.மு.தி.க மீண்டும் தி.மு.க வுடன் கூட்டு என அறிவிக்காது என்பது நினைக்க முடியாது. அதுவும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இன்னும் இரண்டு நாட்களுக்கு எதையும் உண்மை என நம்ப முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க