July 21, 2017 தண்டோரா குழு
ஒவ்வொரு நாளும் வேகதடையால் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழக்கின்றனர் என்று நிதின் கட்காரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் நாடெங்கும் சாலை விபத்துகளில் பலர் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். சாலை விபத்துகளை குறைக்க பரபரப்பான சாலைகளில் வேகத்தடை போடப்படுகிறது. இருப்பினும், இந்த வேகதடையால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 9 பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் மற்றும் 3௦ பேர் படுகாயம் அடைகின்றனர் என்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போது வேகதடையால் ஏற்படும் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.கடந்த 2௦15ம் ஆண்டு தேசிய சாலையில் அமைந்துள்ள வேக தடையால் ஏற்படும் விபத்தில் 3,409 உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,764 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அதேபோல் கடந்த 2014ம் ஆண்டு வேகதடையால் ஏற்படும் விபத்தில் 3,633 பேர் உயிரிழந்துள்ளனர் 9,428 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்” என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி எழுது மூலம் மாநில அவையில் தெரிவித்துளார்.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டாம் என்றும், ஏற்கனவே இருக்கும் வேகத்தடைகளை நீக்க வேண்டும் என்றும், தேவையான இடங்களில் மட்டும் சிறிய அளவிலான வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.