May 25, 2016 தண்டோரா குழு.
ஓம் என்ற மந்திரத்துடன் யோகா தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று உப ஜனாதிபதி முகமது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ம் தேதி அனுசரிக்க உள்ளது.45 நிமிட யோகா பயிற்சியின் போது 2 நிமிடம் இறை வணக்கம் ,பிறகு 15 நிமிடம் தியானப் பயிற்சியும் நடைபெறும். இப்பயிற்சியின் போது ருக் வேதத்திலிருந்து சில மந்திரங்கள் உச்சரிக்கப்படும்.
இவ்வாறு பயிற்சியாளர்களை வேத மந்திரங்களை உச்சரிக்கச் செய்வதன் மூலம் அமைச்சகம் இந்து மத கோட்பாடுகளை ப் பிறரிடம் திணிக்கிறது என்று காங்கிரஸ்,JDU மற்றும் பல எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு த் தெரிவித்துள்ளன.யோகா பயிற்சி இந்தியாவின் தொன்மையான பழைய வித்தை.அதை இந்து மதத்தோடு இணைப்பது சரியாகாது என்றும் கூறியுள்ளன.
இந்தக் கருத்து மாறுபாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கையில் மிகுந்த அளவு ஆக்ஸிஜன் உட்செலுத்தப்படுகிறது.இது விஞ்ஞான ரீதியாக உடல் நலத்தைப் பேணுவதாகும்.அல்லா,காட் என்று சொல்வது போன்றே இதைக் கொள்ளவேண்டும்.யோகா இல்லாவிட்டால் தனது உடலின் சில குறைபாடுகள் களையப் பட்டிருக்காது என்று சல்மா ஹன்சாரி தெரிவித்தார்.
யோகா பயிற்சியாளர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு சில சங்கல்பங்களைச் செய்து கொள்ளுவது அவசியம்.
எப்பொழுதும் மனதை ஒரு நிலையில் ,சமநிலையில் வைத்துக்கொள்ளுவது.
சீரான மனநிலையினால் எந்த இலக்கையும் எட்டமுடியும் என்ற தீர்மானத்தோடு செயலாற்றுவது.
தனக்கும்,தனது குடும்பத்திற்கும்,செய்யும் தொழிலுக்கும் சமூகத்திற்கும்,நாட்டிற்கும்,உலகிற்கும்,ஆற்ற வேண்டிய கடமைகளை ச் சரிவரச் செய்து , சமாதானத்தையும்.நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையையும் ,நிலைநாட்ட முற்படுவது போன்றவையாகும்.
பயிற்சியாளர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டால் போதுமானது.ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அமைச்சகம் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.