July 22, 2017 தண்டோரா குழு
175 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படும் கோவை குறிச்சி குளத்தில் படகு துறைமற்றும் நடைபாதை அமைக்கப்படும் என தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை குறிச்சி குளத்தை தூர்வாரும் பணியை குளங்கள் பாதுகாப்பு இயக்கமும், தமிழக அரசும் 175 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னெடுத்துள்ளது. இதற்கான மொத்த செலவுத்தொகையை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தூர்வாரும் பணியைதமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா அமைப்பின் நிறுவனர்ஜக்கி வாசுதேவ், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தூர்வாரும் பணி முடிவடையும் போது இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டும் உயரும் என்றும் 175 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படும் கோவை குறிச்சி குளத்தில் படகு துறைமற்றும் நடைபாதை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
ஜக்கிவாசுதேவ் பேசும்போது,
கடந்த 1944ம் ஆண்டு தனிநபருக்கு கிடைத்த தண்ணீரைவிட தற்போது 21 சதவீதம் மட்டுமே கிடைப்பதாகவும் நதிகள் இணைப்பு மற்றும் ஆறு குளங்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நாளைய தலைமுறைக்கு தண்ணீரை விட்டுச்செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.