July 22, 2017 தண்டோரா குழு
அடங்காத பசி நோயால் பாதிக்கப்பட்ட 1௦ வயது சிறுவன், வீட்டில் கிடைக்கும் காகிதங்களை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
தென் ஆப்ரிக்கா புமலங்கா மாகாணத்திலுள்ள ஸ்டான்டர்டன் என்னும் இடத்தில் வசித்து வருகிறான் 1௦ வயது சிறுவன் காம்டேன். அந்த சிறுவனுக்கு பிரடர் வில்ஸ் சிண்ட்ரோம் (Prader Willis Syndrome) என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இந்த வியாதியால் பாதிக்கப்படுவோர் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. இதனால் அதிக உடல் எடை, வளர்ச்சி குறைப்பாடு ஆகியவை ஏற்படுகிறது. பொதுவாக 1௦ வயது சிறுவர்களுடைய எடை 18 கிலோ இருக்கும். ஆனால் இவனுக்கு உடல் எடை 88 கிலோ.
எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் அவன், கையில் எது கிடைத்தாலும் அதை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். அவனுடைய உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவனால் முச்சு விடமுடியவில்லை. இதனால், அவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது.
“இவனை நாங்கள் பல மருத்துவர்களிடம் காட்டினோம். ஆனால், எந்த குறையால் அவனுடைய உடல் எடை அதிகரித்து வருகிறது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ப்ரேடோரியா நகரிலுள்ள ஸ்டீவ் பிகோ மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவர்தான் காம்டேனுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி குறித்து கண்டுபிடித்தார்.
காலையில் நான்கு சீஸ் ரொட்டி சாப்பிடுவான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மிஞ்சி இருக்கும் இரவு உணவை சாப்பிட்டு கோக் குடிப்பான். மதியம் இரண்டு பெரிய கோழி துண்டை சாப்பிடுவான். வீட்டிலிருக்கும் அனைத்து உணவு பொருட்களையும் மறைத்து வைக்கும் கட்டாயமும் ஏற்பட்டது.
சில வேளைகளில் கழிவறையில் இருக்கும் டாயலேட் பேப்பர்களை கூட சாப்பிட்டு விடுவான். என் மகனை நான் உயிருடன் பார்க்க வேண்டும் என்றால், அவனுக்கும் உணவு கட்டுப்பாட்டு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர்.
சாதாரன குழந்தைகளைபோல் தன்னால் வாழ முடியவில்லையே என்ற மன சோர்வும் அவனிடம் காணப்படுகிறது. மற்ற குழந்தைகளை போல் தானும் வெளியே சென்று விளையாட வேண்டும் என்று என்னிடம் கூறி அழுவதும் உண்டு” என்று காம்டேனின் தாய் தெரிவித்தார்.