July 24, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி.
அம்பாள் : அருள்மிகு அபிராமி அம்பாள்.
மூர்த்தி : ஸ்ரீசுந்தரேஸ்வரர்.
தலவிருட்சம் : இலந்தை மரம்.
தலச்சிறப்பு :
கார்த்திகை முதல் செவ்வாயில் இங்கு வியாசரால் உண்டாக்கப்பட்ட வியாச குளத்தில் நீராடுவோர் மைந்தனைப் பெற்றும், இரண்டாம் செவ்வாயில் நீராடுவோர் செல்வத்தையும், மூன்றாம் செவ்வாயில் நீராடுவோர் ஞானத்தையும், நான்காம் செவ்வாயில் நீராடுவோர் நினைத்தவாறு அடைதலும், ஐந்தாவது செவ்வாய் உண்டு எனில் அன்று நீராடினால் போக மோட்சங்களையும் அளிக்க வல்லதாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அத்தோஷம் நீங்கும்.
வழிபட்டோர் : காசியப்பர், அகத்தியர், பிருகு, கபிலர், கந்தர், வியாசர், சூரியன், நளன் போன்றவர்கள்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பூஜை விவரம் : நான்கு கால பூஜை.
திருவிழாக்கள் : கார்த்திகை கடைச் செவ்வாய் மற்றும் தினசரி பூஜைகள்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி திருக்கோவில்,இலந்துறை அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.