July 25, 2017
தண்டோரா குழு
எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரசை அழிக்க கூடிய ஆற்றல் பசுக்களுக்கு உண்டு என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2௦16ம் ஆண்டு சுமார் 1 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு, உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த நோயிலிருந்து மக்கள் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரசை அழிக்கும் முக்கிய நோய் எதிர்ப்பு சக்திகளை, தொடர்ந்து மற்றும் விரைவாக உற்பத்தி செய்வதில் கன்றுக்குட்டிகள் திறன் பெற்றுள்ளது. அந்த நோய் எதிர்ப்பு சக்திகளை எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்ட மனிதர்கள் உடலுக்குள் செலுத்தினால், அவர்கள் உடலிருக்கும் எச்.ஐ.வி கிருமிகளை அழிக்க வழிவகுக்கும்.
எச்.ஐ.வி ஒரு மனித வைரஸ் ஆகும். ஆனால், இது போன்ற கொடிய வைரஸ்களை அழிக்க விலங்கு ராஜ்யத்தில் இருந்து, பல நோய் எதிர்ப்பு சக்திகளை உற்பத்தியாகும் திறனை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டு என்று International AIDS Vaccine Initiative நிறுவனம் தெரிவித்துள்ளது.