July 25, 2017
tamilsamayam.com
நடிகர் மாதவன் அடுத்ததாக இயக்குனர் சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த மாதவன் அடுத்ததாக ‘களவாணி’ பட இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார். சாக்லேட் பாய் இமேஜுடன் களமிறங்கிய நடிகர் மாதவன், ஒருகட்டத்தில் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். பல வருடங்கள் கழித்து ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் மீண்டும் அவரைத் தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் சுதா கொங்கரா. அதைத் தொடர்ந்து மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’, கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
படத்தில் மாதவனும், விஜய் சேதுபதியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். படம் எல்லா இடங்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்த படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். அடுத்ததாக, நடிகர் மாதவன், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மாதவன் நிரந்தரமாக மும்பையில் தங்கியிருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் மட்டும் அவர் சென்னை வந்து செல்வார்.