July 26, 2017
தண்டோரா குழு
கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் இருக்கும் நடிகை காவ்யா மாதவனிடம் நேற்று காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது நடிகை கடத்தலில் காவ்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அறியும் வகையிலான கேள்விகளை போலீசார் கேட்டதாகவும் ஆனால் நடிகை கடத்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே காவ்யா கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காவ்யா மாதவன் விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே நடிகர் திலீப்பை வரும் 8 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.