July 26, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ் சுறா மீனுக்கு போட்டியாக கடலில் நீச்சல் அடித்து தோல்வியடைந்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ், பிரபல தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவரி சேனல், ஞாயிற்றுக்கிழமை இரவு ‘சுறா வாரம்’ என்னும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் பிரபல நீச்சல் வீரர் மைகேலுக்கும் சுறா மீனுக்கிடையே 1௦௦ மீட்டர் நீச்சல் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியை டிஸ்கவரி சேனலில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து உள்ளனர். ஆனால் மைகேல் போட்டியிட சுறா மீன் கணினி மூலம் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் மீன் என்று உணர்ந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, மைக்கேலின் ரசிகர்கள் பேஸ்புக் பதிவில் தங்கள் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிபடுத்தியுள்ளனர். சுறா மீனுக்கு போட்டியாக திறந்த கடலில் நீந்துவது சுலபமான காரியம் இல்லை.
மேலும் மைக்கேல் மற்றும் சுறா மீன் அருகருகே நீந்தும் போட்டி இல்லை என்று அந்த நிகழ்ச்சியின் விளம்பரம், நேர்காணல்கள் ஆகியவற்றில் தெளிவாக கூறப்பட்டு இருந்தது என்று டிஸ்கவரி நிறுவனம் தெரிவித்துள்ளது.