July 27, 2017
தண்டோரா குழு
பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்த நிலையில் பா.ஜ.க ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார்.
லாலு பிரசாத்தின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் பதவி விலகாத காரணத்தினால் மெகா கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார்.
இதனிடையே பீகார் ஆளுநர் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை கொடுத்து வெளியேறினார். நிதிஷ்குமார் ஆட்சியமைக்க பா.ஜ.க, ஆதரவு அளித்தது இதனையடுத்து கவர்னரை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார், இதனையடுத்து இன்று காலை நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். பா.ஜ.க,வை சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.