July 27, 2017
தண்டோரா குழு
தாய்லாந்து நாட்டில் மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 1,௦66 ஆமைகள் கடலில் விடப்பட்டது.
தாய்லாந்து நாட்டில் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ், அந்நாட்டை சுமார் 7௦ ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் காலமானார். அவருக்கு பிறகு, அவருடைய மகன் வஜிரலாங்கோரன் மன்னராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் அவருடைய 65வது பிறந்த நாள் நாளை(ஜூலை 28) கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் சொன்புரி மாகணத்தின் சட்டாஹிப் கடற்படை தளத்தின் அருகிலுள்ள கடல்பகுதியில், நூற்றுக்கணக்கான பள்ளி சிறுவர் சிறுமிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து, சுமார் 1,௦66 ஆமைகளை கடலுக்குள் விட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். அந்நாட்டின் புத்த துறவிகளும் நல்ல கர்மா அல்லது முன்வினை பயனை அடைய, சிறைபிடிக்கப்பட்ட ஆமைகள், பறவைகளை விடுவிப்பது வழக்கம்.
பொதவாக ஆமைகள் நீண்ட வாழ்நாளுக்கு அடையாளம் என்பதால், அந்நாட்டின் மன்னருடைய வாழ்நாளும் நீண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆமைகள் விடப்பட்டுள்ளது.