July 27, 2017 தண்டோரா குழு
உலகின் அனைத்து நாடுகளும் பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் மற்றும் பாலியல் தொந்தரவு அவர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
பெண்கள் பேருந்தில், அலுவலகத்தில், பள்ளிக்கு செல்லும்போது என அனைத்து இடங்களிலும் பாலியல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். நமது இந்திய தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகாமாக காணப்படுகிறது.
பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க, பெண்களின் எந்த வகையான ஆடைகளிலும் அணியக்கூடிய “wearable sticker” என்னும் ஒரு கருவியை, அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒருவர் ஒரு பெண்ணை தொடும்போது, “Wearable Sticker”ரை அணிந்துக்கொண்டு இருக்கும் நபரிடம், அது அவர்களுக்கு சம்மதமா என்று குறுஞ்செய்தியை முதலில் அனுப்புகிறது. எந்த பதிலும் வராத நிலையில், அந்த பெண்ணின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ, அந்த பெண் இருக்கும் இடத்தை குறித்த தகவலை அனுப்பி வைப்பதோடு, எச்சரிக்கை மணியையும் அனுப்பி வைக்கிறது.
இந்தக் கருவியின் மூலம் நடந்த இடத்தில், பேச்சு உள்ளிட்ட அனைத்தையும் அது பதிவு செய்து விடுகிறது. அப்படி செய்வதால், வழக்கு விசாரணையின்போது, அது ஒரு சாட்சியாக திகழ்கிறது. இந்த கருவி தனியாக இருக்கும் பெண்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.