July 28, 2017
tamilsamayam.com
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் நடிகர் விக்ரமை வைத்து ‘அயன் 2’ படத்தை இயக்கவுள்ளார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அயன்’ இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இந்த படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதிலாக அவர் கேரக்டரில் நடிகர் விக்ரமை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ‘அயன் 2’ படத்தின் ஒன்லைன் கதையை விக்ரமிடம் கூறி அனுமதி வாங்கிவிட்டார்.
இயக்குனர் ஹரி இயக்கும் ‘சாமி 2’ படத்தை முடித்தப் பின்னர் ‘அயன் 2’ படத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக்கும் என்று கூறப்படுகிறது.