July 28, 2017
tamilsamayam.com
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், கேப்டன் பொறுப்புக்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பதை கோலி நிரூபித்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது.இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 446 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதில் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியவுடன் புதுபந்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் மாற்றி மாற்றி மிரட்டினர்.
முதல் இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றியவுடன், கேப்டன் கோலி, இரண்டாவது ஸ்லிப் பீல்டரை நீக்கி வேறு இடத்துக்கு மாற்றினார். இதனால் பல கேட்ச் வாய்ப்புகள் பறிபோனது. இந்த உக்தி வேகமாக ரன்கள் சேர்க்க நினைக்கும் டி-20, ஒருநாள் போட்டிகளுக்கு ஓ.கே, ஆனால் மந்தமான டெஸ்ட் போட்டிகளில் இது பெரிய அளவில் கைகொடுக்காது.
பந்தின் தன்மை மாறும் வரை, இந்த ஸ்லிப் பீல்டகளை டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்கள் ஸ்லிப் பீல்டர்களை மாற்றவிரும்ப மாட்டார்கள். சிறிது நேரத்துக்கு பின் இந்த யுக்தியை கோலி தானாக சரி செய்தாரா? அல்லது ரவி சாஸ்திரி செய்தி அனுப்பி சரி செய்தாரா என தெரியவில்லை. ஆனால் அதன்பின் மேலும் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதன்மூலம் கோலி இன்னும் முழுமையாக தயாராகவில்லை என போட்டியின் வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.