July 28, 2017
தண்டோரா குழு
கொல்கத்தாவில் குடிபோதையிலிருந்த பெண்,காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில், 38 வயது பெண் ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டியுள்ளார். காரில் ஒரு ஆண் நண்பர் மற்றும் ஒரு பெண் நண்பர் அவருடன் பயணித்துள்ளனர். கொல்கத்தாவிலுள்ள சிங்க்ரிகாடா என்னும் இடத்தில் இரவு, காரை தாறுமாறாக ஒட்டி வந்து, சாலையின் தடுப்பு சுவர் மீது மோதியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண் அவரை அடித்துள்ளார். விபத்து நடந்த தகவலை அறிந்த பிதான் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு வந்த காவலர், அந்த பெண்ணை காரிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண், அவரை உள்ளே இழுத்து கட்டியணைத்து முத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர், அருகிலிருந்த பெண் காவலர் உதவியை நாடியுள்ளார். அவரும் உதவி செய்ய, காரிலிருந்த மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த மூன்று பெரும், வட கொல்கத்தாவின் காலேஜ் ஸ்ட்ரீட் என்னும் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், கண்மூடித்தனமாக வாகனம் ஒட்டி வந்த அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.