July 28, 2017
தண்டோரா குழு
கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் பாட்மிட்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பி.வி.சிந்து பாட்மிட்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து பல போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு துணை கலெக்டர் பதவியை வழங்கி கௌரவித்துள்ளது. ஆந்திர பிரதேஷ் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனிப்பட்ட முறையில், சிந்துவுக்கு அரசு ஆணையை அமராவதியின் செயலகத்தில் ஒப்படைத்தார். அடுத்த 3௦ நாட்களுக்குள் அவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு அவருக்கு 3 ஆண்டுகள் பயிற்சி காலமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“நீங்கள் என்னை இந்த பதவிக்கு தேர்ந்தெடுத்தற்காக மிக்க மகிழ்ச்சி. எனக்கு பாட்மிட்டன் தான் முதன்மையானது. விளையாட்டில் மட்டுமே என்னுடைய கவனம் இருக்கும்” என்று சிந்து கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று, இந்திய திரும்பியதும் அவருக்கு பரிசு தொகையாக 3 கோடி ரூபாய், அமராவதியில் 1,௦௦௦ சதுர அடி வீடு மற்றும் அரசு வேலையை தர ஆந்திர பிரதேஷ் அமைச்சரவை முடிவு செய்தது. அதேபோல் தெலங்கானா அரசும் அவருக்கு பரிசுகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.