July 31, 2017 தண்டோரா குழு
சீனாவில் கிரெடிட் கார்ட் மூலம் அளவுக்கு அதிகாமாக கடன் வாங்கி, அதை திருப்பிக் கட்ட முடியாததால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவை சேர்ந்த ஜூநாஜுஆன் (59), கிரெடிட் கார்டை பயன்படுத்தி 3.71 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளார். சீனாவின் ஹுபெய் மாகணத்தின் தலைநகரான வுஹான் நகரிலுள்ள நீதிமன்றத்தில், கடனை திருப்பி தராத அவர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் திருப்பி தரவேண்டிய 3. 71 மில்லியன் டாலர் தொகையை உடனே திருப்பி தரவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் கடனை திருப்பி தராததையடுத்து, அவரைப் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சீனாவின் ஷேன்ஷேன் என்னும் நகரில் ஷூ நாஜுஆன் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே அங்கு சென்ற அவர்கள் ஷூ நாஜுஆனை கைது செய்துள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்த அவருடைய புகைப்படத்தில் இருந்த முகமும், தற்போது உள்ள முகம் வெவ்வேறாக இருந்துள்ளது. இதை பார்த்த அவர்கள் முதலில் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆனால், அவரிடம் நடத்திய விசாரணையில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி தர முடியாததால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலமாக தன்னுடைய முகத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது சிறையில் அடைத்தனர்.