July 31, 2017
tamilsamyam.com
அடுத்தடுத்து தொடர் வெற்றியை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அதிக செலவில் உருவாகி வரும் சங்கமித்ரா படத்தில் நடிப்பது மிகவும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அவர் தனி ஒருவன் படத்திலிருந்து கொடுத்து வரும் தொடர் வெற்றியால் மகிழ்ந்து போன மலேசியாவை தலைமையாக கொண்ட மேபேங்க் (Maybank) அவருக்கு ஒரு டெபிட் கார்டு வழங்கியுள்ளது.
அதில் ஜெயம் ரவியின் தனிஒருவன் புகைப்படத்தை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டு உலகம் முழுவதும் விணியோகிக்கப்படுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதனால் கின்னஸ் சாதனை செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.