July 31, 2017
tamilsamayam.com
இலங்கை அணியை வீழ்த்திய பின் வீரர்களுடன் வித்தியாசமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி, 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் தங்களது வழக்கமான ஸ்டைலில் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர், குளு குளு நீச்சல் குளத்தில் நீராடியுள்ளனர். இந்த புகைப்படங்களை இந்திய கேப்டன் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய அணியினருடன் சேர்ந்து பிபா கால்பந்து வீடியோ கேம் விளையாடி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.