July 31, 2017
தண்டோரா குழு
செஸ் வீராங்கனை நந்திதாவுக்கு ஐந்து லட்சம் ரூபாயை ஊக்கத் தொகை வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நந்திதா கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் பட்டம் பெற்றார்.
இதுத்தவிர ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
இவர் மேலும் பல சாதனைகள் செய்ய,ஊக்குவிக்குகம் வகையில்,அவரை பாராட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பி.வி.நந்திதாவுக்கு 5 ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளர்.