July 31, 2017 தண்டோரா குழு
ஜெர்மனியில் பழங்காலத்தின் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது,ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி ஜெர்மனி மட்டுமல்லாமல் உலகமெங்கும் பயத்தை உருவாக்கி வந்தது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை போல், ஹிட்லர் என்றாலே உலக நாடுகள் பயந்தன. ஹிட்லர் உருவாக்கிய நாசி படை, அவருடைய கண்ணசைவை கவனித்து எதிர்களை கொன்று குவித்தனர். அவருடைய ஆட்சி காலத்தில் சுமார் 6 கோடி யூத மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
1939 முதல் 1945ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அந்த போர் தொடங்கிய 1939ம் ஆண்டு, தென் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்கு தங்கத்தை கொண்டு சென்ற சரக்கு கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலில் ஐஸ்லாந்து அருகே மூழ்கியது. அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 163 மில்லியன் டாலர் (125 மில்லியன் பவுண்ட்) இந்திய செலவாணிபடி 2 கோடி என்று கருதப்படுகிறது
அமெரிக்காவை சேர்ந்த Advanced Marine Service கடலில் மூழ்கிய கப்பலையும் தங்கம் வைக்கப்படிருந்த பெட்டியையும் கண்டுபிடித்துள்ளது. அந்த பெட்டியில் நான்கு டன் மதிப்புடைய தங்கம் இருக்கிறது என்று கருதப்படுகிறது. கப்பலில் இருந்த பெட்டியை திறக்க ஐஸ்லாந்து அரசின் அனுமதியை பெற காத்திருக்கிறது.
முன்பதாக, அந்த புதையலை கண்டுபிடிக்க உதவிய ஐஸ்லாந்து நாட்டின் கடற்படை ஊழியர்களுக்கு சரியான உரிமம் இல்லை என்று அவர்களை மீண்டும் ஐஸ்லாந்து நாட்டிற்கு திரும்பும்படி அந்நாட்டின் அரசு உத்தரவிட்டது.
மேலும், அந்த புதையலை கண்டுப்பிடித்தவருக்கே அந்த புதையலை தர வேண்டும் என்று Advanced Marine Service நிறுவனம் ஐஸ்லாந்து அரசுடன் கோரிக்கை வைத்துள்ளது. அவர்களுடைய முடிவை பெற காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.