August 1, 2017
tamilsamayam.com
லாகோஸ் சர்வதேச பேட்மின்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மானு அட்ரி இணை சாம்பியன் பட்டம் வென்றது.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சர்வதேச சேலஞ்ச் பேட்மின்டன் தொடர் நடந்தது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுமித் ரெட்டி மற்றும் மானு அட்ரி இணை 21–13, 21–15 என்ற நேர் செட் கணக்கில் நைஜீரியாவின் குட்வின் மற்றும் ஜுவோன் இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ராகுல் யாதவ் 21–15, 21–13 என்ற நேர் செட் கணக்கில் சக இந்திய வீரர் கரண் ராஜனை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மக்தோ அக்ரே 12–21, 14–21 என்ற செட்களில் இலங்கையின் திலினி பிரமோடிகாவிடம் கோப்பையை இழந்து இரண்டாவது இடத்தைப் பெற்றார்.