August 1, 2017 தண்டோரா குழு
அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட அகதிகளான குழந்தைகளுக்கு லெபனான் நாட்டில் பள்ளிகளை திறக்கவுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மற்றும் அவருடைய மனைவி அமல் ‘Clooney Foundation of Justice’ என்னும் அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தின் வழியாக சிரியா நாட்டில் உள்நாட்டு போரால், பாதிக்கப்பட்ட சுமார் 3,000க்கும் மேற்பட்ட அகதிகளான குழந்தைகளுக்கு லெபனான் நாட்டில் பள்ளிகளை திறக்கவுள்ளார்.
“இதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும். நாளைய தலைவர்களாக வரும் அந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்க்காலத்தை பெறுவார்கள்” என்று அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.