August 1, 2017 தண்டோரா குழு
ரேஷன் கடைகளில் 2018வரை மட்டுமே மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படும்என குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார்.
உணவுப்பொருள் மானியம் 2018-வரை மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது என்றும்நாட்டின் 81 கோடி மக்கள் பயன்பெற்று வரும்மானிய விலையில் அரிசி ரூ.3 க்கும் கோதுமை ரூ.2க்கும் 2018 வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, 2013-ம் ஆண்டு தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உணவு தானியங்களின் விலைகளை மாற்றலாம், ஆனால் 2018 வரை நடப்புத் திட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளோம்.ஆதலால், மானிய விலையான கோதுமை ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்பது 2018-ம் ஆண்டு வரை தொடரும். நாட்டில் உணவு தானியங்கள், பொருட்களைச் சேமிப்பதற்காக தனியார் தொழில்முனைவோர் உத்தரவாத திட்டம் 2008-09-ல் உருவாக்கப்பட்டு கிட்டங்கி கட்டுமானங்களுக்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
எனவே 2018 வரை மானிய விலை அரிசி, கோதுமை ஆகியவற்றில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.