August 2, 2017 தண்டோரா குழு
சீனாவை சேர்ந்த 4 வயது சிறுமி, தனது தாயுடன் கேரள சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த ஜியோலின் என்னும் பெண், தனது 4 வயது மகள் ஹான் ரியு ஹெள மற்றும் அவரது சகோதரர் சாங் க்வி ஹெள ஆகியோருடன் இந்தியாவின் கேரளா மாநிலத்திதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளாவின் காக்காநாடு என்னும் இடத்தில் ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் விசா காலம் முடிந்த பிறகும், ஜியோலின் இந்தியாவில் தங்கியுள்ளனர் என்று கேரளா காவல்துறையினர் அவரையும் அவருடைய மகளையும் ஜூலை 19ம் தேதி கைது செய்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணின் உறவினர் தப்பி தலைமறைவாகிவிட்டார். அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து,நீதி மன்றத்தில் ஆஜார் படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜியோலின் சிறையில் அடைக்குமாறு அந்த நீதிபதி தீர்பளித்தார். ஆனால், கேரளாவில் ஜியோலினுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவருடைய மகளை பார்த்துக்கொள்ள யாருமில்லை. இதையடுத்து, அவருடைய மகளையும் தாயுடன் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், அவர்களுக்கு சீன உணவை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட பிறகும், அந்த உணவை வழங்க முடியவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கும் உணவு தான் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சுதந்திரமாக பாடி திரிந்த குழந்தை, சிறைப்பட்டு இருப்பது வேதனையை தருகிறது.