May 27, 2016
தண்டோரா குழு.
வேதாளம் படத்திற்கு பின் தல அஜித் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்று பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் மீண்டும் அஜித் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகத் தல அஜித்தின் 57வது படத்தைப் பற்றிய பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும், இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற எந்தத் தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்து வந்தது.
எனினும், அண்மையில் படத்தின் தகவல்கள் பற்றி இன்று வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. தல அஜித்தின் 57வது படத்திற்கு அனுருத் இசையமைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் தல அஜித்தின் 57வது படத்திற்கு தான் இசையமைக்கப் போகிறேன் என்று அனிருத்தே தன்னுடைய டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தல படத்திற்கு இசையமைப்பது பெருமையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.