• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறைக் கைதிகளுக்கு போதை மருந்தை ஆளில்லா விமானம் மூலம் தர முயற்சி.

May 27, 2016 தண்டோரா குழு.

முன்பெல்லாம் சிறையில் இருக்கும் ஒருவரைப் பார்க்க செல்லும் போது பழங்களோ அல்லது புத்தகங்களோ இல்லை உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வர். அவ்வாறு கொண்டு செல்லும் பொருள்களை சரிபார்த்து விட்டு கைதியிடம் தருவதா இல்லை நிராகரிப்பதா எனச் சிறைத்துறை அதிகாரி தீர்மானிப்பார்கள்.

ஆனால் இன்று காலம் வெகுவாக மாறிவிட்டது. பணமும் அதிகாரமும் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் குற்றங்கள் அதிகமாகி விட்டதை நம்மால் பார்க்க முடிகிறது. சிறை வாழ்க்கை முன்பை விட தற்போது பல சௌரியங்களைத் தந்து வருகிறது. சிலருக்கு வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை வழங்க அனுமதி தரும் நிலையைப் பார்க்க முடிகிறது.

ஆனால் லண்டனில் சிறை கைதிகளுக்குக் கள்ளத்தனமாக போதைப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களைத் தர ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி வருவதால் வாழ்க்கை முறை முன்பை விட வெகுவாக முன்னேறி உள்ளது. கைபேசி, கணினி போன்ற நவீன பொருட்களைப்போல், ஆளில்லா விமானமும் பிரபலமாகி விட்டது. இதைப் போர் வேளைகளில் மட்டும் பயன்படுத்தாமல் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

லண்டன் நகரை அடுத்த வான்ச்வோர்த் சிறையில் உள்ள கைதிகளுக்கு தேவையான பொருள்களை ஆளில்லா விமானம் மூலம் கொண்டு வந்து தருவதையும் அவர்கள் தங்கள் சிறையின் ஜன்னல் வழியாக அதை பெற்றுக் கொள்வதையும் அங்கு உள்ள புகைப்பட கருவியில் பதிவாகி உள்ளது.

கைபேசி, போதைப் பொருட்கள், ஆயுதங்கள் என்று சுமார் 2,000 பொருள்கள் சிறைச்சாலைக்குள் கடத்தப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பொருள்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டுவரும் பழக்கம் தொடரும் பட்சத்தில் அவற்றை ஆளில்லா விமானத்தின் மூலம் கொண்டு வருவது கைதிகளுடைய பெருமையை அதிகரிப்பதாகச் சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் 797ல் இருந்து கடந்த ஆண்டு 2,151ஆகா உயர்ந்துள்ளது. இதை நீதித்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதை விசாரித்த நீதிமன்றம் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு அளித்தனர்.

மேலும் படிக்க