August 2, 2017
தண்டோரா குழு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ்.
இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. ஓவியாவுக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பியது ஆரவ்வை தான், ஆனால் தற்போது அவரும் மற்றவர்களை போல ஓவியாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் ஆரவ்வை பலரும் வெறுக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,
இந்த சனிக்கிழமை ஆராவின் லீலைகள் குறும்படம் வெளிவரும் எனவும் புதுசுக்காக பழையதை வெறுக்கும் ஆம்பள ஜூலி. பொம்பளைங்க சாபம் சும்மா விடாது எனவும் கூறியுள்ளார்.