August 3, 2017 தண்டோரா குழு
ரயில் பயணத்தின் போது திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் பார்க்கும் வசதியை அறிமுக படுத்தவுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹெய்ன்,
ரயில் பயணத்தின் பொது நிகழ்ச்சிகள் வழங்குவதற்கு பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் இந்த வசதி அறிமுகமான பின்பு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வேண்டுவோர் ரயிலில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட பாடல்கள் வீடியோக்களை தங்கள் மொபைல் போன் மற்றும் லேப்டாப் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
மேலும், சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட 1300 ரயில்களில் இந்த வசதியை வழங்குவதற்காக பரிந்துரை கோரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த பொழுதுபோக்கு வசதிக்காக தனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.