August 3, 2017 தண்டோரா குழு
மின்னல் ஒன்று கோபத்துடன் பொங்கி வரும் எரிமலை மீது மோதுவது போன்ற புகைப்படத்திற்கு 2017-ம் ஆண்டிற்கான தேசிய புவியியல் பயண புகைபடக்காரர் விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், தேசிய புவியியல் பயண புகைப்படக்காரர் விருதை வழங்கி வருகிறது. அதன் படி, இவ்வாண்டிற்கான விருதை மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த செர்ஜியோ டாபிரோ வலேச்கோ பெற்றுள்ளார்.
இப்போட்டிக்கு 30 நாடுகளிலிருந்து சுமார் 150௦௦00 புகைப்படங்கள் வந்துள்ளது. அங்கு வந்த புகைப்படங்களில் சிறந்த புகைப்படம் எது என்று அந்த போட்டியின் நீதிபதிகள் பார்த்துக்கொண்டிருந்தபோது,
மின்னல் ஒன்று கோபத்துடன் பொங்கி வரும் எரிமலை மீது மோதுவது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்துள்ளனர். அந்த புகைப்படத்தை சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
மெக்ஸிகோ நாட்டிலுள்ள அந்த எரிமலையை செர்ஜியோ கடந்த ஓரு ஆண்டாக கவனித்து வந்துள்ளார். அந்த எரிமலை வெடித்து, தீ பிளம்புகள் வெளிவர தொடங்கிய போது, மின்னல் ஒன்று அதை தொட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அவர் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலிருந்து எடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ‘இயற்கையின் வல்லமை’ என்று செர்ஜியோ டாபிரோ வலேச்கோ பெயரிட்டுள்ளார்.