August 4, 2017 தண்டோரா குழு
ஐஸ்லாந்து நாட்டில் 3 மாத குழந்தைகளை நிற்க பழக்கும் சிறப்பு நீச்சல் பயிற்சி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐஸ்லாந்து சோனரி மாக்னுசன் என்னும் நீச்சல் பயிற்சியாளர், 3 மாத குழந்தைகள் சொந்த கால்களில் நிற்க 12 வார நீச்சல் பயிற்சி தருகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
ஒரு குழுவில் 12 குழந்தைகள் இருக்கின்றனர். அந்த 12 குழந்தைகளில், 11 குழந்தைகள் 15 வினாடிகள் நிற்கின்றனர். ஆனால் அவ்வளவு நேரம் நிற்க முடியாத ஒரு குழந்தை சுமார் 8 வினாடிகள் நின்றுள்ளது.
“பொதுவாக இந்த வயது குழந்தைகளிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கும் காரியங்களை ஒப்பிடும்போது, இந்த பயிற்சி மூலம் கிடைத்த முடிவுகள் வித்தியாசமானவை. நாம் நினைப்பதை விட குழந்தைகள் பல காரியங்களை செய்யமுடியும்” என்று பயிற்சியாளர் தெரிவித்தார்.
குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொள்வதை எளிதில் மறப்பதில்லை. பயிற்சியின் மூலம் தங்கள் கற்றதை பூரணப்படுத்தும் திறன் உடையவர்கள். குழந்தைகள் 9 மாதத்தில் யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே நிற்க முடியும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.