May 28, 2016
தண்டோரா குழு.
விளம்பரங்களின் மூலமாக 40 நாட்களில் 100 கோடிகளை நடிகை பிரியங்கா சோப்ரா சம்பாதிக்கவிருக்கிறார்.
ஹாலிவுட் சென்றபிறகு பிரியங்கா சோப்ராவின் மதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. குவாண்டிகோ சீரியலைத் தொடர்ந்து பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 24 விளம்பரப் படங்களில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்காகத் தொடர்ந்து 40 நாட்களை அவர் ஒதுக்கியிருக்கிறார். இந்த விளம்பரப் படங்களின் மூலம் பிரியங்காவிற்கு வரும் வருமானம் சுமார் 100 கோடிகள் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடிகளுக்கு அதிபதியாகப் பிரியங்கா மாறப் போகிறார். ஹாலிவுட் சீரியல் மற்றும் பட வாய்ப்புகள், ஆஸ்கர் விழா, ஒபாமா விருந்து போன்ற காரணங்களால் பிரியங்கா சோப்ராவின் புகழ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதனால் பல்வேறு விளம்பரக் நிறுவனங்களும் பிரியங்காவை தங்களின் விளம்பரத் தூதுவராக நியமிக்க போட்டி போட்டு வருகின்றன.