August 4, 2017 தண்டோரா குழு
வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த ஏர் பிரான்ஸ் விமானத்திம் ஆபத்தின்றி தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், டோக்யோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நகருக்கு 330 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் பயணித்துள்ளது. அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவான்சாங் 14 ஏவுகணை விமானம் அருகே பாய்ந்து சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தின் மீது அது மோதவில்லை.
அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் தலைமையகம் பென்டகான் அதிகாரி கூறுகையில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவான்சாங் 14 விண்ணில் பாய்ந்து, வணிகம் மற்றும் மீன்பிடிக்க பயனபடுத்தப்படும் கடல்பகுதியில் விழுந்து வெடித்துள்ளது” என்று தெரிவித்தார்.
“ஏர்-பிரான்ஸ் விமானம் சென்ற பகுதியில் ஏவுகணையால் எந்த ஆபத்தும் நேரவில்லை.
வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 3) ஏர்பிரான்ஸ் விமான சேவை எப்பொழுதும்போல் சீராக நடந்தது” என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.