August 4, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று மரண தருவாயில் இருந்த நோயாளியின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா வாஷிங்டின் டி.சி அருகில் நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கும் நோயாளிகளுக்கான இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எமிலி போமேரான்ஸ் என்னும் பெண் அந்த இல்லத்தில் வசித்து வருகிறார். இதனிடையே மரண தருவாயில் உள்ள அவர் அவருடைய தோழியிடம் ஓஹயோ மாகாணத்திலுள்ள டாமி உணவகத்தின் பிரபல ‘மொஸா மில்க்க்ஷேக்’ வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனது தோழியின் ஆசையை நிறைவேற்ற சாம் முடிவெடுத்தார். உடனே டாமி உணவகத்தின் உரிமையாளார் டாமி பெலோவை தொடர்புக்கொண்டு, தனது தோழியின் ஆசையை தெரிவித்துள்ளார். அதை கேட்ட அவர், எமிலியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, எமிலிக்கு விருப்பமான ‘மொஸா மில்க்க்ஷே’க்கை தயாரித்து, சுமார் 37௦0 மைல் தூரத்திலுள்ள நோயாளிகள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார். எமிலி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். ஆனால், அவர் இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பதாக, அவர் விரும்பிய மில்க்க்ஷேக் வந்து சேர்ந்தது. அதை மகிழ்ச்சியுடன் சுவைத்துள்ளர்.