August 4, 2017 தண்டோரா குழு
பெங்களூர் நகரின் அழகான காலநிலையும் பசுமையும் மாறி, தற்போது அதிகரித்து வரும் மாசு மற்றும் குறைந்து வரும் பசுமை குறித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் பள்ளிகளுக்கு இடையே ஆன ஓவிய போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. பெங்களூரில் உள்ள 130 பள்ளிகளும் 550க்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
ஜூனியர் மாணவர்களுக்கு ‘பெங்களூர் நகரின் காலநிலை’ என்னும் தலைப்பின் கீழும், சீனியர் மாணவர்களுக்கு கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் கிராமம் மற்றும் நகரை ஒப்பிட்டு இருக்கும் ஓவியமும் வரைய வேண்டும் என்று போட்டியின் தலைப்பு கொடுக்கப்பட்டது.
ஜூனியர் பிரிவில் இருந்த மாணவர்கள் பெங்களூர் நகரின் அழகும், அழகான காலநிலையும் பசுமையும் மாறி தற்போது அதிகரித்து வரும் மாசு மற்றும் குறைந்து வரும் பசுமை குறித்து தங்கள் ஓவியங்களை வரைந்தனர்.
“மாணவர்களின் திறமைகள் பார்ப்பவர்களின் கண்களையும் இதயத்தையும் கவர்ந்துள்ளன. பெங்களூர் நகரின் மேல் அவர்கள் கொண்ட அன்பு, அவர்களுடைய ஓவியங்கள் எடுத்துரைக்கின்றன. எது சிறந்த ஓவியம் என்று சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு ஓவியமும் அதை வரைந்தவரின் கைவண்ணம் இருந்தது” என்று அந்த போட்டியின் நீதிபதி தெரிவித்தார்.