August 7, 2017 தண்டோரா குழு
இரண்டாம் உலகப்போபோரின்போது, அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி பகுதியில் அணு குண்டு வீசயது. இதன் 72-ம் ஆண்டு நினைவு தினத்தை ஜப்பான் இன்று அனுசரித்தது.
1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போரர் நடந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒரு அணியாகவும், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போலந்து, சீனா, கிரீஸ், யுகோஸ்லாவியா, மற்றும் பெல்ஜியம் மற்றொரு அணியாக போரிட்டது.
அந்த போரின்போது, அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர்(Pearl Harbour) மீது தாக்குதல் நடைபெற்றது. அதில் 20 கடற்படை கப்பல்கள், எட்டு போர் கப்பல்கள், 300க்கு மேற்பட்ட போர் விமானங்கள் சேதமடைந்தன. 2000 அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அமெரிக்கா 1945-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாகி பகுதிகளில் அணு குண்டு வீசினர். ஹிரோஷிமாவில் நடந்த தாக்குதலில் 1,45,000 பெரும், நாகாசாகியில் சுமார் 74,000 பெரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் 72-ம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலுள்ள அமைதி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஷின்சோ அபே உட்பட பல தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
அதில் பேசிய குடியரசுத் தலைவர், “அணு ஆயுதம் இல்லாத ஒரு உலகத்தை படைக்க வேண்டும்,”என்றார்.