August 7, 2017
தண்டோரா குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்து வெளிவரவுள்ள படம் விவேகம்.
நாளுக்கு நாள் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெரும் அளவில் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே இந்தப் படத்தின் சர்வைவா, தலை விடுதலை, காதலாட போன்ற பாடல்கள் வெளியாகியிருந்தாலும் படத்தின் முழு ஆல்பத்தை கேட்க தல ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்
தற்போது இப்படத்தின் மற்ற 4 பாடல்களும் வெளியாகியுள்ளது. Saavn என்ற இணையதளத்தில் விவேகம் படத்தின் ஆல்பம் வெளியாகிவுள்ளது.