August 7, 2017
தண்டோரா குழு
சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகரக இருந்த ஹலிமா யாகேப் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் ஆவார்.
இதனை அடுத்து அவர் கடந்த சில வாரங்களாகவே, பல சமூக குழுக்கள் மக்களை சந்தித்து வருகிறார். தொழிலாளர்கள் திறமைகளை மேம்படுத்துவது, மத மற்றும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவது என பல பணிகளில் களம் இறங்கியுள்ளார்.
அரசியலில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஹலிமா எடுத்திருக்கும் முடிவு, வெற்றியில் முடியும் என்று அவரது ஆதரவாளர்களால் கருதப்படுகிறது.