August 7, 2017 தண்டோரா குழு
பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியாக செய்யாத கோவை மாநகராட்சியை கண்டித்து சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் வழங்கிட வலியுறுத்தியும் சிங்காநல்லூர் , கவுண்டம்பாளையம் , சரவணம்பட்டி,குறிச்சி , பீளமேடு மற்றும் மாநகர பகுதிகளில் நான்கு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் தி.மு.க சார்பில் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 15முதல் 20 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி மக்களை வாட்டி வதைக்கின்ற அ.தி.மு.க ஆட்சியையும் , கோவை மாநகராட்சியையும் கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பபட்டன.
ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் குடியிருப்போர் நகர்நலச்சங்க நிர்வாகிகள் , வணிகர்கள், தொழிலாளர்கள் , தி.மு.கழக செயல்வீரர்கள் என 5௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.