• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக பெயரில் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை – தா.பாண்டியன்

August 7, 2017 தண்டோரா குழு

அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக அரசியலில் திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தமிழக விவசாயிகளின் பிரச்சனையில், தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு விவகாரத்தில், அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி வித்திப்பால் சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளது. வரி சீர் திருத்தத்தை நாங்கள் ஏற்திர்க்கவில்லை. 2011ல் இந்த முறை விவாதத்திற்கு வந்தபோதே நாங்கள் ஆதரித்தோம். மேற்கு வங்காளம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றினோம்.

அதிமுகவைப் பொறுத்தவரை அது தற்போது மூன்றாகவோ, நான்காகவோ உள்ளது. தமிழகத்தில் இப்போது தேர்ந்தேடுக்கப்பட்ட கட்சி ஆட்சியில்இல்லை. இருப்பவர்கள் தமிழக நலனுக்காக நிற்கவில்லை. அதிமுகவின் வெவ்வேறு அணிகளால் தான் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க