August 9, 2017 தண்டோரா குழு
கதிராமங்கலம் போராட்டத்தின் போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் விவசாய நிலங்களை அழித்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தப்படவிருக்கும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களால் போலீசார் தாக்கப்பட்டனர்.இச்சம்பவத்தின் போது போராட்டங்களை நடத்தி வந்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் தஞ்சை நீதிமன்றத்தில் இவர்கள் அனைவருக்கும் பல முறை ஜாமீன் மறுத்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்,பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும்,பாஸ்கர், செந்தில் உள்ளிட்ட 7 பேரும் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு ஜாமின் வழங்கியது.