August 9, 2017
tamilsamayam.com
சர்வதேச டெஸ்ட் அரங்கில் நம்பர்-1 ஆல் ரவுண்டர் இடம் பிடித்த இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 12ல் கண்டியில் துவங்குகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, பவுலர்களுக்கான தரவரிசையிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் நம்பர் -1 இடத்துக்கு முன்னேறினார். இதற்காக இவருக்கு டுவிட்டரில் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோலி வெளியிட்டுள்ள் பதிவில்,’நம்பர்-1 இடத்துக்கு முன்னேறிய வாள்வீச்சு மாஸ்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு, வாழ்த்துக்கள். வெல் டன் ஜாது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.