August 9, 2017 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் உயிரினமான “Australian Spotted Hand Fish” இன மீன்கள், பீர் பாட்டில்களில் வாழ்ந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடல் பகுதியில் “Australian Spotted Hand Fish” என்னும் இனத்தை சேர்ந்த மீன்கள் வாழ்ந்து வருகின்றனர். அழிந்து போகும் மீன் இனங்கள் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் அழிவிலிருந்து காத்துக்கொள்ள, கடல் படுக்கைகளில் தூக்கி எறியப்படும் பீர் பாட்டில்களில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறது.
கடலில் பாய்ந்து செல்லும் கப்பல்கள் மற்றும் வட சீனா, தென் கொரியா, ரஷ்யா மற்றும் ஜப்பான் கடல் பகுதியில் வாழும் நட்சத்திர மீன்கள் ஆஸ்திரேலியா கடல் பகுதியில் துளையிட்டு, “Australian Spotted Hand Fish” இனம் வசிக்கும் இடத்தை அழித்து விடுகிறது.
இதனால், கடல் படுக்கையில் வீசி எறியப்படும் பீர் பாட்டில்கள், தங்கள் இனத்தை பெருக்க சரியான இடம் என்று, அதில் வாழ்ந்து வருகின்றன. நட்சத்திர மீன்கள் பீர் பாட்டில்களை அழிக்க முடியாததால், “Australian Spotted Hand Fish” இன மீன்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதனால், அந்த மீன்கள் அதில் வாழ்ந்து வருவதை பார்க்கமுடிகிறது.
ஆய்வாளர்கள் அந்த இனத்தை மீட்க, ஆற்றில் செயற்கை வாழ்விடங்களை உண்டாக்கி, அந்த மீன்கள் முட்டையிட, சுமார் 6,000 பிளாஸ்டிக் குச்சிகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு பெண் மீனும் சுமார் 200 முட்டைகளையிடும். அவை பொறித்து வெளியே வரும் வரை தாய் மீன், அவைகளை பாதுகாத்துக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.