August 9, 2017 தண்டோரா குழு
ஆந்திரா மாநிலத்தின் துணை கலெக்டராக பி.வி. சிந்து இன்று(ஆகஸ்ட் 9) பதவியேற்றுள்ளர்.
கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி சிந்து, விஜயவாடா நகரின் புறநகர் பகுதியான கோல்லாப்புடி என்னும் இடத்திலுள்ள “Chief Commissioner of Land Administration(CCLA)” அலுவலகத்தின் ஆந்திர மாநிலத்தின் துணை கலெக்டராக இன்று பதவியேற்றார்.
கடந்த ஜூலை 27ம் தேதி, ஆந்திர அரசு அவருக்கு துணை கலெக்டர் பதவியை வழங்கியது. ஆந்திர முதலமைச்சர், சந்திரபாபு நாயுடு, தனிப்பட்ட முறையில் சிந்துவுக்கு நியமன உத்தரவு கடிதத்தை வழங்கினார்.
மேலும் அவவருக்கு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஆந்திர அரசின் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் சரியாக பின்பற்றினால், 9 ஆண்டுகளில் UPSC வழங்கும் IAS பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.
இந்த சாதனைக்காக அப்போதே சிந்துவிற்கு ரூ.3 கோடி, அமராவதியில் 1000 சதுரடியில் வீட்டு மனை பரிசாக ஆந்திர அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.