May 30, 2016 தண்டோரா குழு
நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்த சமயத்தில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்பு விழாவின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த ஃபரூக் அப்துல்லா எழுந்து நின்று கொண்டு தனது கைப்பேசியில் யாருடனோ பேச ஆரம்பித்துவிட்டார்.
இதைக் கண்ட சக நண்பர்கள் அப்துல்லாவின் செயலைக் கண்டித்துள்ளனர். இது வருந்தத் தக்க செயல் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தேசிய கீதத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை என்றும். தன்னுடைய செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும் படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் எப்பொழுதும் இந்தியாவின் பக்கம் பேசுவதாகவும், ஆதரிப்பதாகவும், பலரும் தன்னை குற்றம் சாட்டியிருக்கிறனர். அவ்வாறிருக்கத் தன்னை இவ்வாறு அவதூறு கூறுவது எந்தவிதத்திலும் பொருந்தாது என்று கூறியுள்ளார்.
அப்துல்லா அவர்கள் பிரிவினைவாதிகளுடன் தேசிய கீதத்தைப் பற்றிப் பேசியிருக்கக்கூடும் என்று பி.ஜே.பி தலைவர் ஷைனா கூறியுள்ளார்.
தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் அவமதிப்பது நாட்டையே அவமதிப்பதாகும். ஒவ்வொரு பிரஜையும் ஆர்டிகிள் 51 ஏ (எ) சட்டப்படி தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் மதிப்பது அவசியம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இரு பத்திரிகையாளர்களை தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காத காரணத்திற்காக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை வெளியேற்றிய சம்பவம் நினைவிருக்கலாம்.