August 10, 2017
tamilsamayam.com
மதிக்காத இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் கும்ளே சரியான முடிவு எடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் அசாருதின் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போது, பயிற்சியாளர் கும்ளே, கேப்டன் கோலி இருவருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ஒருவழியாக கும்ளே பதவியில் இருந்து விலகினார். இதன்பின் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து, முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்மானத்துக்கு ஒரு பிரச்சனை வந்தால், கும்ளே இடத்தில் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வாங்க என முன்னாள் இந்திய கேப்டன் அசாருதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசாருதின் கூறுகையில்,
கும்ளேவின் நிலையை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் கோவப்படும் நபர் அல்ல. ஆனால், தன்மானத்தை இழப்பதை விட விலகியிருக்கலாம் என அவர் நினைத்திருக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் மிகச்சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார். என்றார்.